திடீரென மொட்டை அடித்து ஷேவ் செய்த தனுஷ்.. இதுதான் காரணமா?

  • IndiaGlitz, [Monday,July 03 2023]

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்திற்காக அவர் நீண்ட தலைமுடி மற்றும் தாடி வளர்த்திருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த படம் முழுவதும் அவர் தாடியில் தான் தோற்றமளிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை அடுத்து தற்போது அவர் தாடியை எடுத்துவிட்டு மொட்டையும் அடித்துள்ளதாக தெரிகிறது.

இன்று அவர் தனது மகன்களுடன் திருப்பதி சென்றுள்ளதாகவும் அங்குதான் அவர் மொட்டை அடித்து தாடியை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. தனுஷின் மொட்டை தோற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தனுஷ் நடித்து இயக்க இருக்கும் ’D50’ திரைப்படத்தின் பூஜை இந்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் அவர் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பார் என்றும் அதற்காக தான் இந்த மொட்டை கெட்டப் என்றும் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தனுஷின் ’D50’ திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என்பதும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நமீதா குழந்தைகளின் முதல் பிறந்தநாள்.. க்யூட் புகைப்படம் வைரல்..!

நடிகை நமீதா தனது இரட்டை குழந்தைகளின் பிறந்த நாளை கேரளாவில் உள்ள கோவிலில் கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

'எமனே தவறு செய்தாலும் தட்டி கேட்பேன்: 'மாவீரன்' படத்தின் மாஸ் டிரைலர்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மீண்டும் 'தெறி' படத்தில் இணைந்த அட்லி.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கிய நிலையில் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மீண்டும் 'தெறி' படத்தில் அட்லி

ஒருவழியா 'ஜெயிலர்' அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்.. அனிருத் வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

செந்தில்-ஸ்ரீஜா வீட்டில் இன்று என்ன விசேஷம்? க்யூட் புகைப்படம்..

தொலைக்காட்சி சீரியல் நட்சத்திர ஜோடி செந்தில்-ஸ்ரீஜா ஜோடிக்கு திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் பெற்றோர் ஆன நிலையில் தற்போது