close
Choose your channels

திடீரென மொட்டை அடித்து ஷேவ் செய்த தனுஷ்.. இதுதான் காரணமா?

Monday, July 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்திற்காக அவர் நீண்ட தலைமுடி மற்றும் தாடி வளர்த்திருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த படம் முழுவதும் அவர் தாடியில் தான் தோற்றமளிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை அடுத்து தற்போது அவர் தாடியை எடுத்துவிட்டு மொட்டையும் அடித்துள்ளதாக தெரிகிறது.

இன்று அவர் தனது மகன்களுடன் திருப்பதி சென்றுள்ளதாகவும் அங்குதான் அவர் மொட்டை அடித்து தாடியை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. தனுஷின் மொட்டை தோற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தனுஷ் நடித்து இயக்க இருக்கும் ’D50’ திரைப்படத்தின் பூஜை இந்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் அவர் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பார் என்றும் அதற்காக தான் இந்த மொட்டை கெட்டப் என்றும் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தனுஷின் ’D50’ திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என்பதும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.