close
Choose your channels

தனுஷின் 'ராயன்' படத்தின் மாஸ் அறிவிப்பு.. தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சன் பிக்சர்ஸ்..!

Monday, May 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தனுஷின் 50வது படம் என்பதால் இந்த படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த பதிவில் ‘ராயன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் மே 9ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தகவல்கள் தனுஷ் ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் கம்போஸ் செய்த ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பதும் இந்த பாடலை அநேகமாக தனுஷ் பாடி இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment