close
Choose your channels

கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம்.. சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்..!

Monday, May 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல்கள் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோவான கவின் நடிப்பில், இளன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள ‘ஸ்டார்’ திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. கோடை விடுமுறையில் சரியான நேரத்தில் இந்த படம் வெளியாக இருப்பதால் ஓப்பனிங் வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் அதாவது 158 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வெற்றி படத்திற்கு தேவையான ரன்னிங் டைமில் இந்த படம் உருவாகியுள்ளது என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கவின் ஜோடியாக அதிதி பொலங்கர் நடித்த இந்த படத்தில் லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் எழிலரசு ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.