close
Choose your channels

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தனுஷ் கொடுத்த 'ராயன்' அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்..!

Sunday, April 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் முடிந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல திரைப்படங்களின் அப்டேட்டுகள் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் தனுஷ் தனது ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த போஸ்டரில் தனுஷ், சந்திப் கிஷான், காளிதாஸ் ஜெயராமன் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் இருக்கின்றனர். மேலும் இந்த பதிவில் ஃபர்ஸ்ட் சிங்கள் மிக விரைவில் வெளியாகும் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஆர் ரகுமான் மற்றும் தனுஷ் இணைந்த ‘மரியான்’ திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் அதேபோல் ‘ராயன்’ படத்திலும் செம்மையான பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.