படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி, கொடுங்க, சாப்பாடு மாதிரி விக்காதீங்க: தனுஷின் 'வாத்தி' டீசர்

  • IndiaGlitz, [Thursday,July 28 2022]

தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றன

ஒரு நிமிடம் உள்ள இந்த டீசரில் உள்ள அசத்தலான வசனங்கள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஜீரோ ஃபீஸ் ஜீரோ எஜூகேஷன், மோர் ஃபீஸ் மோர் எஜுகேஷன்’ இதுதாண்டா இப்ப டிரெண்டு’ என்று வசனம் இன்றைய கல்வி நிலையங்களின் நிலையை அப்பட்டமாக எடுத்து காட்டுகிறது.

அதேபோல் படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி, கொடுங்க, ஃபைவ் ஸ்டார் ஓட்டல் சாப்பாடு மாதிரி விக்காதீங்க’ என்ற வசனத்திலிருந்து இந்த படம் இந்தியாவின் கல்வித்துறையை அலசி ஆராய்ந்துள்ளது என தெரிய வருகிறது.

தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

More News

தங்கர்பச்சானின் அடுத்த படத்தில் நடிக்கும் 2 பிரபல இயக்குனர்கள்!

தமிழ் திரையுலகில் தரமான மற்றும் மனதை உருக்கும் வகையில் கதையம்சம் கொண்ட படங்களை இயக்குபவர் தங்கர்பச்சான் என்பதும் இவர் இயக்கிய 'அழகி' 'சொல்ல மறந்த கதை' 'பள்ளிக்கூடம்

முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் பிரபல ஹீரோ: மும்பை நிறுவனத்தின் கதையா?

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக பிரபல ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதால் போலிவுட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கணவருக்கு பாதபூஜை செய்த சூர்யா-கார்த்தி பட பிரபல நடிகை: எதற்காக தெரியுமா?

சூர்யா, கார்த்தி படங்கள் உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை தனது கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்

சிம்புவின் 'பத்து தல' படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்கள் குஷி

சிம்பு நடித்த வந்த 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த மாதம் ஆரம்பத்தில் இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்த நிலையில்

கமல்ஹாசன் - உதயநிதி படத்தின் கதை இதுவா? ஆச்சரிய தகவல்

 உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி நடிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியானது