close
Choose your channels

தனுஷின் 'வாத்தி' படத்தின் செம அப்டேட்.. பிப்ரவரிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Wednesday, January 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வந்துள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தனுஷ் நடித்த ’மாறன்’, ‘தி க்ரேமேன்’, ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ’நானே வருவேன்’ ஆகிய 4 திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இதில் ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 17 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவில் நவீன்நூலி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.