close
Choose your channels

'தளபதி 66' படத்தில் இணைகிறாரா தனுஷ் நாயகி?

Monday, March 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66ஆவது திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் பட நாயகி இணைய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் ’தளபதி 66’. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் இணைய இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் மெஹ்ரின் பிர்ஜதா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் தனுஷ் நடித்த 'பட்டாஸ்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் மெஹ்ரின் பிர்ஜதா நடித்துள்ளார் என்பதும் இவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பதும், இந்த படத்திற்கான பாடல் கம்போஸிங்கை அவர் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.