'காக்கி சட்டை' இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்தார் தனுஷ்

  • IndiaGlitz, [Saturday,August 08 2015]

'வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி என தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த தனுஷ், தற்போது 'விஐபி 2 படத்தில் நடித்து வருகிறார். விரைவில் வெற்றிமாறனுடன் இணைந்து 'வடசென்னை' படத்திலும் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை 'காக்கி சட்டை' படத்தை இயக்கிய துரை செந்தில்குமார்' இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த காக்கி சட்டை படத்தை தயாரித்த தனுஷ், அந்த படத்தின் படப்பிடிப்பின்போதே, துரை செந்தில்குமாரின் உற்சாகமான பணியை பார்த்து வியந்து, மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தனுஷுடன் காமெடி நடிகர் சதீஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ்-துரைசெந்தில்குமார் இணையும் படம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு வழக்கம்போல் அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கக்கூடிய நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

More News

அஜீத், விஜய்யுடன் இணைந்தார் விக்ரம்

'தல அஜீத்' நடித்து வரும் 'தல 56' திரைப்படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது......

மரண தண்டனை கைதியை காப்பாற்ற போராடும் பிரபல நடிகை

வட்டாரம், உன்னாலே உன்னாலே, பேராண்மை, ஜெயம்கொண்டான் போன்ற பல படங்களில் நடித்திருந்த நடிகை வசுந்தரா காஷ்யப்....

2015ஆம் ஆண்டின் SIIMA விருதுகள் அறிவிப்பு

2015ஆம் ஆண்டின் சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருதுகள் (SIIMA 2015) நேற்று இரவு துபாயில் வெகுசிறப்பாக நடந்தது...

'பாபநாசம்' சாதனையை சமன் செய்த 'தூங்காவனம்'

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படம் வெறும் 38 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

'பாயும் புலி' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் இசை வெளியீட்டின் அதே தினத்தில் தனது 'பாயும் புலி' படத்தின் இசை வெளியீட்டையும் நடத்திய விஷால்