close
Choose your channels

'பாயும் புலி' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

Saturday, August 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் இசை வெளியீட்டின் அதே தினத்தில் தனது 'பாயும் புலி' படத்தின் இசை வெளியீட்டையும் நடத்திய விஷால், 'புலி' ரிலீஸாகும் தேதியில் 'பாயும் புலி'யையும் ரிலீஸ் செய்வார் என்று கூறப்பட்டு வந்தது.. இந்நிலையில் தற்போது 'பாயும் புலி' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனமான 'வேந்தர் மூவீஸ் அறிவித்துள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர்களும் இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


விஷாலுடன் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சூரி, ஹரீஷ் உத்தமன், ஆர்கே, ஜெயப்பிரகாஷ், ஆனந்த்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் அந்தோணியின் படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் திருட்டு டிவிடிக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்து வரும் விஷால் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில், 'மத்திய அரசு ஆபாச பட இணையதளங்களை தடை செய்தது போல, புதுப்படங்களை பதிவு செய்து வரும் இணையதளங்களையும் தடை செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.