close
Choose your channels

'பாபநாசம்' சாதனையை சமன் செய்த 'தூங்காவனம்'

Saturday, August 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படம் வெறும் 38 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் நடித்த படம் ஒன்று மிகக்குறுகிய நாட்களில் முடித்தது இதுவே முதல்முறை என்று கூறப்பட்ட நிலையில் இந்த சாதனையை சமன் செய்துள்ளது உலகநாயகனின் அடுத்த படமான தூங்காவனம். இந்த படமும் சரியாக 38 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது.


இந்த படத்திற்கு கமல்ஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியுள்ள ஜிப்ரான் இசையமைத்திருந்தாலும் இந்த படத்தில் பாடல்களே இல்லை என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு பாடல் படத்தின் புரமோஷனுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்றும், அந்த பாடல் படத்தில் இடம்பெறாது என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னால் கமல்ஹாசன் நடித்த 'உன்னை போல் ஒருவன்' படத்திலும் ஸ்ருதிஹாசன் பாடிய ஒரு புரமோஷன் பாடல் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் சம்பத், ஆஷா சரத், உமா ரியாஸ்கான், யூகிசேது, மதுஷாலினி, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தை சுமார் ரூ.50 கோடி செலவில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.