close
Choose your channels

'காக்கி சட்டை' இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்தார் தனுஷ்

Saturday, August 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி என தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த தனுஷ், தற்போது 'விஐபி 2 படத்தில் நடித்து வருகிறார். விரைவில் வெற்றிமாறனுடன் இணைந்து 'வடசென்னை' படத்திலும் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை 'காக்கி சட்டை' படத்தை இயக்கிய துரை செந்தில்குமார்' இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த காக்கி சட்டை படத்தை தயாரித்த தனுஷ், அந்த படத்தின் படப்பிடிப்பின்போதே, துரை செந்தில்குமாரின் உற்சாகமான பணியை பார்த்து வியந்து, மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தனுஷுடன் காமெடி நடிகர் சதீஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ்-துரைசெந்தில்குமார் இணையும் படம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு வழக்கம்போல் அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கக்கூடிய நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.