'விஐபி', 'மாரி'யுடன் கனெக்ஷன் ஆகும் தனுஷின் 'கொடி'

  • IndiaGlitz, [Wednesday,January 27 2016]

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள திரைப்படத்தின் தலைப்பு, ரிலீஸ் தேதி குறித்த எவ்வித தகவல்களும் வெளிவராத நிலையில் அதற்கு பின்னர் தொடங்கப்பட்ட தனுஷின் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.


முதன்முதலாக அண்ணன் தம்பி என இரண்டு வித்தியாசமாக கேரக்டர்களில் தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தில் த்ரிஷா மற்றும் ஷாம்லி நாயகிகளாக நடித்து வருகின்றனர். எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை' படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கி வரும் இந்த படம் வரும் ரம்ஜான் தினமான ஜூலை 6-ல் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ரம்ஜான் தினத்தில்தான் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'மாரி' ஆகிய படங்கள் ரிலீஸாகியது. மேற்கண்ட இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் செண்டிமெண்ட்டாக அதே தினத்தில் 'கொடி' படத்தையும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

More News

சூர்யாவிடம் இருந்து ஜெயம் ரவிக்கு சென்றது 'துருவ நட்சத்திரம்'

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் 'துருவ நட்சத்திரம்'....

திரை முன்னோட்டம் சுந்தர் சியின் 'அரண்மனை 2'.

கடந்த 2014ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி, ஹன்சிகா, ராய்லட்சுமி, வினய், ஆண்ட்ரியா, சந்தானம் உள்பட பல நட்சத்திரக்கூட்டங்கள் நடித்த 'அரண்மனை'...

பெங்களூர் நாட்கள்' டிரைலர் ரிலீஸ் தேதி - நேரம் குறித்த தகவல்

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் படமான 'பெங்களூர் நாட்கள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர்...

ஒரே நாளில் த்ரிஷா, நயன்தாரா படங்கள் ரிலீஸ்

கோலிவுட் திரையுலகில் த்ரிஷாவும் நயன்தாராவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு மேலும் தொடர்ந்து முன்னணி நடிகைகளாக இருந்து வருகின்றனர்...

தயாரிப்பாளர்களாக மாறும் இளையதலைமுறை நடிகர்கள்

கோலிவுட் திரையுலகில் பெரிய நடிகர்கள் முதல் அடுத்த நிலையில் இருக்கும் நடிகர்கள் வரை சொந்தப்படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர்...