close
Choose your channels

பெங்களூர் நாட்கள்' டிரைலர் ரிலீஸ் தேதி - நேரம் குறித்த தகவல்

Wednesday, January 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் படமான 'பெங்களூர் நாட்கள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.


'பெங்களூர் நாட்கள்' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை சரியாக 6.03 மணிக்கு இணையதளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் டிரைலர் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.,

ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபிசிம்ஹா, ராணா, சமந்தா, பார்வதி, ராய்லட்சுமி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பொம்மரிலு பாஸ்கர் இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோபிசுந்தர் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.