close
Choose your channels

ஒரே நாளில் த்ரிஷா, நயன்தாரா படங்கள் ரிலீஸ்

Wednesday, January 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் த்ரிஷாவும் நயன்தாராவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு மேலும் தொடர்ந்து முன்னணி நடிகைகளாக இருந்து வருகின்றனர். இருவருமே தமிழ், தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி வரும் நிலையில் தற்போது வரும் வெள்ளிக்கிழமை இருவரது படங்களும் ஒரே நாளில் தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் ஆகின்றது.


த்ரிஷா நடித்த 'அரண்மனை 2' படத்தின் தெலுங்கு பதிப்பும், தமிழில் சமீபத்தில் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' படத்தின் தெலுங்கு பதிப்பும் வரும் வெள்ளியன்று அதாவது ஜனவரி 29ஆம் தேதி ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரிலீஸ் ஆகின்றது.

இரண்டு படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இரண்டுமே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.