close
Choose your channels

'அணையாது எரியும் ஒரு பெயர் நீ'.. அர்ஜுன் தாஸ் நடித்த 'அநீதி' டீசர்..!

Tuesday, July 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான ‘அநீதி’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க திரில் கதையம்சம் கொண்டது என்பது இந்த படத்தில் உள்ள டீசர் காட்சிகளில் இருந்து தெரிய வருகிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசையில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் நிச்சயம் த்ரில் கதையம்சம் கொண்ட படத்தை ரசிக்கும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

’கைதி’ ’மாஸ்டர்’ உள்பட ஒரு சில படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் நாயகனாக உள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

எட்வின் சாகாய் ஒளிப்பதிவில் ரவிக்குமார் படத்தொகுப்பில் உருவாக்கிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் மூலம் ரிலீஸ் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.