நேற்று வரை நட்சத்திரம், இன்று முதல் சாமி: பிசி ஷெட்யூலில் விக்ரம்

  • IndiaGlitz, [Saturday,September 30 2017]

ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் வெளிநாட்டுக்கு சென்று ஒருசில மாதங்கள் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின்னர் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கும் நடிகர்கள் மத்தியில் நேற்று ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சீயான் விக்ரம்

ஆம், விக்ரமின் கடுமையான உழைப்பு குறித்து அனைவரும் அறிந்ததுதான். வுதம்மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பை நேற்று முடித்த விக்ரம், இன்று ஹரி இயக்கவுள்ள 'சாமி 2' படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபிசிம்ஹா, பிரபு, டெல்லி கணேஷ், சூரி உள்பட பல நடிக்கவுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். ஷிபுதமீன்ஸ் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும். 

விக்ரம் ஏற்கனவே விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் ஃபைனலில் ஓவியா: வெளியான புதிய ஸ்டில்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று அனைத்து போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பிக்பாஸ் சூப்பர் ஸ்டார் ஓவியாவும் இதனை உறுதி செய்தார்.

தமிழகத்திற்கு புதிய ஆளுனர் நியமனம்

தமிழக கவர்னர் ரோசய்யா அவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக பொறுப்பு ஆளுனராக மகாராஷ்டிரா ஆளுனர் வித்யாசாகர் ராவ் கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார்.

இன்று பிக்பாஸ் ஃபைனல்: வெற்றி பெறுவது யார்?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றி பெறும் போட்டியாளர் சினேகன், கணேஷ், ஆரவ் மற்றும் ஹரிஷ் ஆகியோர்களில் யார்? என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

சரத்குமாருக்கு செல்லாத நோட்டை கொடுத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள்

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது நடிகர் சரத்குமார் அதிமுக ஆதரவு வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.

மீண்டும் கமல்-ஷங்கர் 'இந்தியன்' கூட்டணியை இணைக்கும் தயாரிப்பாளர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.