close
Choose your channels

இன்று பிக்பாஸ் ஃபைனல்: வெற்றி பெறுவது யார்?

Saturday, September 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த மூன்று மாதங்களாக கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றி பெறும் போட்டியாளர் சினேகன், கணேஷ், ஆரவ் மற்றும் ஹரிஷ் ஆகியோர்களில் யார்? என்பது இன்று இரவு தெரிந்துவிடும். இந்த நிலையில் இந்த நால்வரில் யார் வெற்றியாளராக இருக்க தகுதியானவர் என்பது குறித்து தற்போது பார்ப்போம்

சினேகன்: எல்லோரையும் அனுசரித்து போவதில் வல்லவர். கட்டிப்பிடி வைத்தியம் மூலம் ஆறுதல் கூறும் வழக்கத்தை உடையவர், எந்த டாஸ்க்காக இருந்தாலும் கடைசி வரை பார்த்துவிட வேண்டும் என்ற மன உறுதி உடையவர் போன்ற பாசிட்டிவ்கள் இருந்தாலும், பிக்பாஸ்வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தனது அறிவுரைக்கு கட்டுப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தான் மட்டுமே அதிபுத்திசாலி என்ற குணமும், கொஞ்சம் நரித்தனமும் கொண்டவர். ஓவியாவுக்கு பொய்யாக ஆறுதல் கூறியவர்களில் ஒருவர் போன்ற நெகட்டிவ்களும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கணேஷ்: யாரை பற்றியும் புறங்கூறாமல் இருப்பதில் இவர் ஒரு ஆம்பள ஓவியா. கள்ளங்கபடம் இன்றி ஒரு விஷயத்தை அணுகுவது இவரது பலம். ஆனால் மற்றவர்களால் கேலிக்குள்ளாவதும் இதனால்தான். சாப்பாடு விஷயத்தில் இவரை குறை கூறாத போட்டியாளர்களே இல்லை, எனினும் அதை கண்டுகொள்ளாமல் அதற்கும் ஒரு சிரிப்பை உதிர்ப்பவர். எந்த டாஸ்க்காக இருந்தாலும் முகம் கோணாமல் பிக்பாஸ் கூறும் விதிகளை முறையாக பின்பற்றுபவர், ஓவியா விஷயத்தில் நீலிக்கண்ணீர் வடிக்காமல் உண்மையாகவே வருத்தப்பட்டவர் என்ற முறையில் இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உண்டு.

ஆரவ்: ஓவியா விஷயத்தை மட்டும் மறந்துவிட்டு பார்த்தால் ஆரவ் ஒரு ஜெண்டில்மேன். நிச்சயம் வெற்றிக்கு தகுதியானவர். ஆனால் தமிழ் மக்களின் செல்லப்பிள்ளை ஓவியா விஷயத்தில் இவர் காட்டிய அலட்சியம் நெகட்டிவ் ஓட்டுக்களாக மாறும் என்பதால் இவரது வெற்றி கேள்விக்குறியே

ஹரிஷ்: இடையில் வந்தாலும் வந்த நாள் முதல் உண்மையாக உள்ளார். தேவையில்லாத பில்டப், புறம் கூறுதல், பொய்யான நட்பு இல்லை என்பது இவரது பிளஸ். இருந்தாலும் மக்களை கவரும் வகையில் இவரது செயல்பாடுகள் இல்லை என்பதால் இவர் இரண்டாவது இடம் வருவது கூட கடினம்தான்

இந்த நான்கு பேர்களில் யார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாலும் மக்களின் உண்மையான வெற்றியாளர் ஓவியா தான். இந்த வாரம் ஓவியாவையும் வாக்குப்போட்டியில் இணைத்திருந்தால் 90% வாக்குகள் ஓவியாவுக்குத்தான் கிடைத்திருக்கும். இன்றைய ஃபைனல் நிகழ்ச்சியை கூட ஓவியாவின் வரவை காணத்தான் பெரும்பாலானோர் காத்திருக்கின்றனர். எனவே பிக்பாஸ் அவர்களே நீங்கள் நால்வரில் யாரை வேண்டுமானாலும் வெற்றியாளராக அறிவித்து ரூ.50 லட்சம் பரிசை கொடுத்து கொள்ளுங்கள். ஆனால் ஓவியாவுக்கும் சிறப்பு பரிசு கொடுத்து கெளரவப்படுத்துங்கள். ஏனெனில் இந்த போட்டியில் இருந்து ஓவியா தானாகத்தான் வெளியேறினார். மக்கள் அவரை வெளியேற்றவில்லை என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.