close
Choose your channels

விஜய்யை நம்பர் 1 என கூறியது ஏன்? தில் ராஜூ விளக்கம்!

Thursday, December 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தை தயாரித்த தில் ராஜு சமீபத்தில் விஜய் தான் தமிழ் திரையுலகில் நம்பர் 1 நடிகர் என்றும் அவரது ’வாரிசு’ படத்திற்கு போதுமான திரையரங்குகள் கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் தில் ராஜூவின் கருத்துக்கு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் உள்பட ஒருசிலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஒரு திரைப்படம் நன்றாக ஓடுகிறது என்றால் அதற்கு கதை தான் காரணம் என்றும் நடிகர்கள் எந்தவிதத்திலும் காரணம் இல்லை என்றும் ’விக்ரம்’ திரைப் படத்தின் வசூலை ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிஞ்சி உள்ளதை அடுத்து கமல்ஹாசனை விட கார்த்தி, ஜெயம் ரவிதான் பெரிய நடிகர் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தில் ராஜு இது குறித்து மேலும் விளக்கமளித்துள்ளார். ‘விஜய்யை நம்பர் ஒன் நடிகர் என்று ஏன் கூறுகிறேன் என்றால் அவரது படங்கள் மூலம் வசூலை வைத்துதான் என்று கூறியதோடு, விஜய்யின் கடைசி ஐந்து படங்கள் 60 கோடிக்கு மேல் ஷேர் கொடுத்துள்ளன, வேறு எந்த நடிகரின் படங்களும் இந்த அளவுக்கு ஷேர் கொடுக்கவில்லை என்பதால் வசூல் அளவில் விஜய் தான் நம்பர் 1 என்று கூறினேன் என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு மீண்டும் கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment