close
Choose your channels

மீடியா உங்க கையில இருந்தா என்ன வேணும்ன்னாலும் பண்ணுவிங்களா? 'வரலட்சுமியின் 'V3' டிரைலர்

Thursday, December 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்த ‘V3' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களை வைரலாகி வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரி வேடத்தில் வரலட்சுமி நடித்திருக்கும் இந்த படத்தில் பாவனா, எஸ்தர் அனில், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.அமுதவாணன் இயக்கத்தில் அலென் செபாஸ்டின் இசையில் சிவா பிரபு ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு நிமிட டிரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் த்ரில், சஸ்பென்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பாக வரலட்சுமியின் நடிப்பு அசத்தலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கு என ஐபிசியில்ல் தனி சட்டம் இருக்கிறதா? மீடியா கையில் இருந்தால் என்ன வேணும்னாலும் செய்வீங்களா? தமிழ்நாட்டை தவிர ஏதாவது ஒரு மாநிலத்தில் பேருக்கு பின்னாடியோ அல்லது ஊருக்கு பின்னாடியோ ஜாதி இல்லாத ஒரு மாநிலத்தை காட்டுடா பார்க்கலாம்’ போன்ற ஆவேசமான வசனங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.

மொத்தத்தில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.