ஆஸ்கருக்கு வெகு அருகில் 'விசாரணை'

  • IndiaGlitz, [Friday,November 18 2016]

சிறைகளிலும் காவல்துறை விசாரணைகளிலும் நடக்கும் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டிய விசாரணை திரைப்படம் உலக சினிமாவின் உன்னதக் கலை முயற்சிகளில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. உள்நாட்டில் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாரிக் குவித்திருக்கும் இந்தப் படைப்பு, அதன் கருத்து சர்வதேச பார்வையாளர்களிடம் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என்பதை அண்மையில் வெகு சிறப்பாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் விசாரணை', Interrogation என்று ஆங்கிலப் பெயரில் ஆஸ்கர் விருதுகளுக்கான திரையிடல் நிகழ்வில் திரையிடப்பட்டுள்ளது. படம் பார்த்த சர்வதேச திரையுலக பிரமுகர்களும் அறிஞர்களும் இந்தப் படத்தால் பெரிதும் கவரப்பட்டிருப்பதை சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கிடைக்கும் தகவல்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த திரைக்காவியம் சிறந்த அந்நிய மொழித் திரைப்படம் (Best Foreign Language Film) என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வெல்வதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன என்று நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. இது மட்டும் உண்மையாகிவிட்டால் அது உலக அரங்கில் தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட பாய்ச்சலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அது நடக்க வேண்டும் என்று விசாரணை' படக்குழுவினர் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ், இந்திய சினிமா ஆர்வலர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். IndiaGlitz இணையதளத்தைச் சேர்ந்த நாங்களூம் ஒரு இந்தியப் படத்துக்கு ஆஸ்கர் விருது என்ற நெடுங்கனவு விசாரணை' மூலம் நனவாக வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறோம்.அது நடக்கும் என்றே நம்புகிறோம்.
இந்நிலையில் 'விசாரணை' படம் வெளியானபோது அப்படத்துக்கான விமர்சனத்தில் அதிகபட்சமாக 5க்கு 4.5 மதிப்பெண்கள் கொடுத்ததில் பெருமைகொள்கிறோம். அது மிகச் சரியான மதிப்பீடு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
விசாரணை படத்துக்கான IndiaGlitz விமர்சனத்தை இங்கே படிக்கலாம்:

'விசாரணை' திரைவிமர்சனம்

More News

ஜி.வி.பிரகாஷின் 'கிக்'ஐ பாராட்டிய இளையதளபதி

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...

யுவன்ஷங்கர் ராஜாவின் முதல் படத்தில் நயன்தாரா

இன்று நயன்தாராவின் பிறந்த நாளை அடுத்து அவர் கலெக்டராக நடித்து வந்த 'அறம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை வெளிவந்தது...

கோடிட்ட இடங்களை நிரப்புவது காதலா? வாழ்க்கையா? பார்த்திபன்

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் வெற்றியை அடுத்து பார்த்திபன் இயக்கவுள்ள படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. பார்த்திபனின் குருநாதர் கே.பாக்யராஜின்...

'கடவுள் இருக்குறான் குமாரு'க்கு கிடைத்த முதல் வெற்றி

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கியுள்ள 'கடவுள் இருக்குறான்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

நயன்தாராவின் 55வது படத்தின் டைட்டில் அறிவிப்பு.

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலெக்டராக நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக், இன்று அவருடைய பிறந்த நாளில், பிறந்த நாள் பரிசாக அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று அதிகாலை சரியாக 12.00 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. 'அறம்' என்பதுதான் நயன்தாராவின் 55வது படத்த&