close
Choose your channels

ஆஸ்கருக்கு வெகு அருகில் 'விசாரணை'

Friday, November 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறைகளிலும் காவல்துறை விசாரணைகளிலும் நடக்கும் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டிய விசாரணை திரைப்படம் உலக சினிமாவின் உன்னதக் கலை முயற்சிகளில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. உள்நாட்டில் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாரிக் குவித்திருக்கும் இந்தப் படைப்பு, அதன் கருத்து சர்வதேச பார்வையாளர்களிடம் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என்பதை அண்மையில் வெகு சிறப்பாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் விசாரணை`, Interrogation என்று ஆங்கிலப் பெயரில் ஆஸ்கர் விருதுகளுக்கான திரையிடல் நிகழ்வில் திரையிடப்பட்டுள்ளது. படம் பார்த்த சர்வதேச திரையுலக பிரமுகர்களும் அறிஞர்களும் இந்தப் படத்தால் பெரிதும் கவரப்பட்டிருப்பதை சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கிடைக்கும் தகவல்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த திரைக்காவியம் சிறந்த அந்நிய மொழித் திரைப்படம் (Best Foreign Language Film) என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வெல்வதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன என்று நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. இது மட்டும் உண்மையாகிவிட்டால் அது உலக அரங்கில் தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட பாய்ச்சலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அது நடக்க வேண்டும் என்று விசாரணை` படக்குழுவினர் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ், இந்திய சினிமா ஆர்வலர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். IndiaGlitz இணையதளத்தைச் சேர்ந்த நாங்களூம் ஒரு இந்தியப் படத்துக்கு ஆஸ்கர் விருது என்ற நெடுங்கனவு விசாரணை` மூலம் நனவாக வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறோம்.அது நடக்கும் என்றே நம்புகிறோம்.
இந்நிலையில் `விசாரணை` படம் வெளியானபோது அப்படத்துக்கான விமர்சனத்தில் அதிகபட்சமாக 5க்கு 4.5 மதிப்பெண்கள் கொடுத்ததில் பெருமைகொள்கிறோம். அது மிகச் சரியான மதிப்பீடு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
விசாரணை படத்துக்கான IndiaGlitz விமர்சனத்தை இங்கே படிக்கலாம்:

'விசாரணை' திரைவிமர்சனம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.