close
Choose your channels

விஷ்ணுவை புரமோ பொறுக்கி என கூறிய போட்டியாளர்.. எட்டி உதைத்ததால் பரபரப்பு..!

Wednesday, November 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விஷ்ணுவை புரமோ பொறுக்கி என கேப்டன் தினேஷ் கூறியதை அடுத்து விஷ்ணு ஆத்திரமாகி அருகில் இருந்த பொருளை எட்டி உதைத்த காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கும் நிலையில் இந்த வார கேப்டனாக தினேஷ் தேர்வு செய்யப்பட்டார். அவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது மாயா குரூப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் விஷ்ணுவுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று காலை முதல் புரமோவில் விஷ்ணு மற்றும் தினேஷ் மோதிய காட்சிகள் இருந்த நிலையில் இரண்டாவது புரமோவிலும் இருவரும் ஆவேசமாக மோதும் காட்சிகள் உள்ளது.

’வா வா புரமோ பொறுக்கி’ என விஷ்ணுவை தினேஷ் கூற இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்ணு, ’யாரை பார்த்து பொறுக்கி என்கிறாய்? பொறுக்கி கிறுக்கி என்று சொன்னால் வேற மாதிரி ஆயிரும்’ என்று மிரட்டுகிறார். ஆனால் அதன் பிறகும் தினேஷ் மீண்டும் மீண்டும் ’புரமோ பொறுக்கி’ என கூற, விஷ்ணு ஆத்திரத்தில் அருகில் இருந்த ஒரு பொருளை எட்டி உதைத்தார்.

அதன்பின்னர் தினேஷ், ’புரமோவுக்கு கண்டென்ட் வேண்டும் என்பதற்காக போய் போய் பொறுக்கி கிட்டே இருக்க, அங்க போய் பொறுக்குறது, இங்க போய் பொறுக்குறது’ என தினேஷ் கூற இருவருக்கும் இடையே ஆவேசமாக சண்டை நடக்கிறது

இந்த சண்டையே அர்ச்சனா மட்டும் ஓரளவு விலக்கி விட முயற்சி செய்யும் நிலையில் மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்கிறார்கள். இதனை அடுத்து இன்றைய எபிசோடு விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.