'கடைசி விவசாயி' படத்தின் கதை இதுதானா?

  • IndiaGlitz, [Saturday,October 22 2016]

'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் தான் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்ட நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் 'கடைசி விவசாயி' படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு ஆர்ட் படத்தை கமர்ஷியலோடு எடுக்கும் வித்தையை கற்றுள்ள மணிகண்டன், 'கடைசி விவசாயி' படத்தின் மூலம் விவசாயிகளின் கஷ்டத்தையோ அல்லது காவிரி பிரச்சனையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது குறித்தோ கதை சொல்ல போவதில்லையாம்.
பயிர் செய்யும் விவசாயி தான் கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்களை மயில், மான் மற்றும் பறவைகளிடம் இருந்து காப்பாற்ற எப்படி போறாடுகிறார் என்பதுதான் கதையாம். பறவைகள் வாழும் மரங்களை வெட்டி சேதப்படுத்தினால் அவை பயிர்களை சேதப்படுத்திவிடும், எனவே பறவைகளை நிம்மதியாக வாழவிடுங்கள்' என்ற கருத்தை தான் தன்னுடைய பாணியில் சொல்ல போகிறாராம் மணிகண்டன்.
வித்தியாசமான கோணத்தில் யோசித்துள்ள மணிகண்டனின் கான்செப்ட் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அட்டகாசமான பாடலுக்காக சுவிஸ் நாட்டில் விஜய்-கீர்த்திசுரேஷ்

இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கி வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்...

ராகவா லாரன்ஸின் 'மொட்டசிவா கெட்டசிவா' ரிலீஸ் தேதி

கடந்த ஆண்டு வெளியான ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 2' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில்...

இளம் முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் த்ரிஷா

பொதுவாக கோலிவுட் திரையுலகில் நடிகைகளின் மார்க்கெட் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் த்ரிஷா...

தனுஷின் 'கொடி' சென்சார் தகவல்கள்

முதன்முதலாக தனுஷ் நடித்து முடித்துள்ள 'கொடி' திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளது. அரசியல் த்ரில்லர் படமான இந்த படத்தில் முதன்முறையாக தன்ஷூடன் த்ரிஷா நடித்துள்ளார்...

காஷ்மோரா சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி

கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்த 'காஷ்மோரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக நிலையில் உள்ளது...