close
Choose your channels

காஷ்மோரா சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி

Thursday, October 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்த 'காஷ்மோரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இந்த படம் 'யூ' சர்டிபிகேட்டை பெறாததால் தமிழக அரசின் வரிவிலக்கு 30% கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருப்பதால் நல்ல லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படம் தீபாவளி தினத்திற்கு முந்தைய நாள் அக்டோபர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ்நாராயணன் இசையமைத்துள்ளார். கோகுல் இயக்கிய இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.