close
Choose your channels

விஜய் 2 வேடங்களில் நடிக்க இருந்த படம்.. அருண்விஜய்யால் டிராப் ஆனது: பிரபல இயக்குனர்..!

Tuesday, August 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இரட்டை வேடத்தில் ஒரு படத்தை தான் இயக்க இருந்ததாகவும் ஆனால் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படம் ஒன்று அப்போது வெளியான நிலையில் இரண்டு படத்தின் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்ததால் அந்த படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாகவும் பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் விஜய் நடித்த ’வேலாயுதம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் விஜய்க்கு தான் ஒரு கதை சொல்லி இருந்ததாகவும் அந்த படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம் என்றும் ஆனால் இப்போது அருண் விஜய் நடித்த ’தடம்’ என்ற திரைப்படத்தின் கதை கிட்டத்தட்ட அதே போல இருந்ததால் இந்த படத்தை ஒத்தி வைத்து விட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது அந்த படத்தின் திரைக்கதையை மாற்றி உள்ளதாகவும் அதுமட்டுமின்றி விஜய்க்கு வேறு இரண்டு கதைகளை தயாராக வைத்திருப்பதாகவும் விரைவில் இதில் ஏதாவது ஒரு படத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ’தனி ஒருவன்’ திரைப்படம் வெளியாகி வரும் 28ஆம் தேதியுடன் 8 வருடங்கள் ஆக இருக்கும் நிலையில் ’தனி ஒருவன் 2’ படத்தின் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos