close
Choose your channels

பாண்டிராஜ் அடுத்த படத்தின் ஹீரோ இவரா? ரஜினி, கமல், அஜித் பட தயாரிப்பு நிறுவனம் தயார்..!

Monday, April 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பாண்டிராஜ் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ யார் என்பதும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது ரஜினி, கமல், அஜித் படங்களை தயாரித்து வரும் நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாண்டிராஜ் கடந்த 2009 ஆம் ஆண்டு ’பசங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் ’வம்சம்’ ’மெரினா’ ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அவர் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இரண்டு வருடம் கழித்து மீண்டும் பாண்டியராஜ் இயக்க இருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே லைக்கா நிறுவனம் அஜித் நடித்து வரும் ’விடா முயற்சி’ ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ கமல்ஹாசன் நடித்த வரும் ’இந்தியன் 2’ உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வரும் நிலையில் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment