இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த தகவல்!

’அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித், அதன்பின் ’மெட்ராஸ்’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். இந்த வெற்றியின் காரணமாக அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’கபாலி’ மற்றும் ’காலா’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ’காலா’ திரைப்படத்திற்கு பின்னர் பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்த படம் இன்னும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ரஞ்சித், பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருவதாகவும், ஆர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடொக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் ஏற்கனவே ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்து உள்ளது. மேலும் ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சுரேஷ் குமார் இயக்கும் ஒரு திரைப்படமும் தற்போது தயாராகி வருகிறது.

இந்த நிலையில் நீலம் புரடொக்‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக ரஞ்சித்தின் சமூக வலைப்பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டீல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படம் குறித்த மற்ற தகவல்கள் நாளைய பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

முதலாளியும் நடிக்கலாம் என்பதை ஆரம்பித்து வைத்தவர் வசந்தகுமார் தான்: பிரபல தமிழ் ஹீரோ புகழாரம்

கன்னியாகுமரி தொகுதி எம்பியும் பிரபல தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் அவர்கள் நேற்று முன் தினம் மாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

உலகின் மிக நீள பேருந்து பாதை டெல்லி-லண்டன் விரைவில் தொடக்கம்: எத்தனை நாள், எவ்வளவு கட்டணம்?

உலகின் மிக நீளமான பேருந்து பாதையான டெல்லி முதல் லண்டன் வரையிலான பேருந்து பாதை விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

கொரோனாவில் இருந்து மீண்ட விஜய் பட நாயகி: 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும்

பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்: ஹீரோ, இயக்குனர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா தற்போது  'பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும்

என்னை இயக்குனராக்கிய 'மாஸ்' ஹீரோ: ராகவா லாரன்ஸ் தெரிவித்த நன்றி 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக இருந்த ராகவா லாரன்ஸ் அதன்பின் இயக்குநராக மாறினார் என்பது தெரிந்ததே. அவர் இயக்கிய முதல் படம் நாகார்ஜூனா நடித்த 'மாஸ்'