நந்திதாவுக்கு தந்தையாக நடித்த பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,November 20 2015]

கோலிவுட் திரையுலகில் தற்போது இயக்குனர்கள் பலர் நடிகர்களாக மாறி வருகின்றனர். 'உத்தம வில்லன்' படத்தில் கே.பாலசந்தரும், பாண்டியநாடு படத்தில் பாரதிராஜாவும், விஜய் 59' படத்தில் மகேந்திரனும் நடிகர்களாக மாறியுள்ள நிலையில் இன்னொரு பிரபல இயக்குனரான ஆர்.வி.உதயகுமாரும் 'அஞ்சல' படத்தின் மூலம் நடிகராகியுள்ளார்.

பிரபல சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ள 'அஞ்சல' படத்தில் விமல் மற்றும் நந்திதா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் , நந்திதாவின் தந்தையாக நடித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் உதயகுமார் கூறியதாவது, "அஞ்சலை படத்தில் நான் நந்திதாவுக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன். விமலும், நந்திதாவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்கள். விமல் ஒரு யதார்த்தமான நடிகர். கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து கதாபாத்திரமாகவே வாழக்கூடியவர்.

பசுபதியின் நடிப்பை பார்த்து நான் வியந்து போனேன். நான் சிவாஜியின் நடிப்புக்குத்தான் கைத்தட்டியிருக்கிறேன். சிவாஜிக்குப் பிறகு பசுபதியின் நடிப்பை பார்த்து கைத்தட்டியிருக்கிறேன். அந்தளவிற்கு பசுபதி நடித்திருக்கிறார். படம் சிறப்பாக வந்திருக்கிறது. வெற்றிப்படமாக இப்படம் அமையும்' என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றதை அடுத்து விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

More News

விஜய் படத்தில் நடிக்கும் அக்சயகுமார்?

இளையதளபதி விஜய் நடிக்கும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவருடைய அடுத்த படமான...

விக்ரம் படத்தை தயாரிக்கும் விஜய் தயாரிப்பாளர்?

சீயான் விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சுமாரான வசூலை கொடுத்தது. இந்நிலையில் 'அரிமா நம்பி' ...

உலக கழிவறை தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் பிரபல நடிகை

நேற்று உலக கழிவறை நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் கழிவறையின் தேவை...

ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தல' என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி அஜித்துக்கு...

பரதனை விஜய் தேர்வு செய்தது ஏன்?

விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தின் இயக்குனர் 'பரதன்' என்று தகவல் நேற்று வெளியானது என்பதை அனைவரும் அறிவோம்...