close
Choose your channels

நந்திதாவுக்கு தந்தையாக நடித்த பிரபல இயக்குனர்

Friday, November 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் தற்போது இயக்குனர்கள் பலர் நடிகர்களாக மாறி வருகின்றனர். 'உத்தம வில்லன்' படத்தில் கே.பாலசந்தரும், பாண்டியநாடு படத்தில் பாரதிராஜாவும், விஜய் 59' படத்தில் மகேந்திரனும் நடிகர்களாக மாறியுள்ள நிலையில் இன்னொரு பிரபல இயக்குனரான ஆர்.வி.உதயகுமாரும் 'அஞ்சல' படத்தின் மூலம் நடிகராகியுள்ளார்.

பிரபல சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ள 'அஞ்சல' படத்தில் விமல் மற்றும் நந்திதா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் , நந்திதாவின் தந்தையாக நடித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் உதயகுமார் கூறியதாவது, "அஞ்சலை படத்தில் நான் நந்திதாவுக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன். விமலும், நந்திதாவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்கள். விமல் ஒரு யதார்த்தமான நடிகர். கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து கதாபாத்திரமாகவே வாழக்கூடியவர்.

பசுபதியின் நடிப்பை பார்த்து நான் வியந்து போனேன். நான் சிவாஜியின் நடிப்புக்குத்தான் கைத்தட்டியிருக்கிறேன். சிவாஜிக்குப் பிறகு பசுபதியின் நடிப்பை பார்த்து கைத்தட்டியிருக்கிறேன். அந்தளவிற்கு பசுபதி நடித்திருக்கிறார். படம் சிறப்பாக வந்திருக்கிறது. வெற்றிப்படமாக இப்படம் அமையும்` என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றதை அடுத்து விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.