close
Choose your channels

விக்ரம் படத்தை தயாரிக்கும் விஜய் தயாரிப்பாளர்?

Friday, November 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சுமாரான வசூலை கொடுத்தது. இந்நிலையில் 'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் அவர் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்த படத்தை முதலில் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருந்ததாகவும், பின்னர் அந்த நிறுவனம் பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஆனந்த் சங்கரின் கதையில் மிகவும் இம்ப்ரஸ் ஆன விக்ரம் வேறு தயாரிப்பாளரை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் விக்ரம்-ஆனந்த் சங்கரின் இந்த படத்தை தயாரிக்க ஷிபு தமீன் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.