close
Choose your channels

இந்திய அளவில் எஸ்.எஸ்.ராஜமெளலி செய்த சாதனை: குவியும் வாழ்த்துக்கள்!

Sunday, April 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய அளவில் இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள நிலையில் தற்போது 1,000 கோடி ரூபாய் வசூல் பட்டியலில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் இணைந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

கடந்த மார்ச் 24ஆம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடிப்பில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் முதல் நாளில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலில் சாதனை செய்த நிலையில் ஒரே வாரத்தில் 500 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது

இந்த நிலையில் சற்று முன் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகில் இதுவரை அமீர்கானின் ‘டங்கல்’ மற்றும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ இரண்டு திரைப்படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி வசூல் செய்துள்ள நிலையில் அந்தப் பட்டியலில் தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் இதுவரை மூன்று படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி வசூல் செய்துள்ள நிலையில் அவற்றில் இரண்டு படங்கள் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய படம் என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment