close
Choose your channels

7 பேரின் விடுதலை தொடர்பாக இரட்டை வேடம் போடும் திமுக… அம்பலப்படுத்திய அதிமுக தரப்பு!!!

Monday, November 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

7 பேரின் விடுதலை தொடர்பாக இரட்டை வேடம் போடும் திமுக… அம்பலப்படுத்திய அதிமுக தரப்பு!!!

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விதமாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மெத்தனம் காட்டி வருகிறது எனத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் உண்மையில் 7 பேரின் விடுதலை தொடர்பாக திமுகவிற்கு எந்தவிதமாக அக்கறையும் இல்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கிறது. திமுக ஆட்சிக்காலத்தில் இவர்களின் விடுதலை தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டபோது அந்த கோரிக்கையை திமுக தரப்பு நிராகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் 7 பேரின் விடுதலை தொடர்பான பல்வேறு வாதங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதில் கடந்த ஏப்ரல் 19 2000: அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவை நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரி பரிந்துரைக்க முடிவு செய்தது. மற்ற 6 பேரின் தண்டனையைப் பற்றி எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மார்ச் 30, 2010: நளினியின் விடுதலைக்காக அவர் அனுப்பிய கருணை மனுவை அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு மனிதநேயமின்றி நிராகரித்தது. மேலும் கடந்த நவம்பர் 5,2020: இன்று தந்தையின் நிலைப்பாடு என்னவோ அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை கொண்டு இன்று செயல்பட்டு வருகிறார் ஸ்டாலின். ஆனால் உண்மையில் எழுவர் விடுதலையில் அக்கறைக்கொண்ட அஇஅதிமுக கடந்த பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 7 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த வழக்கு பிரதமரின் கொலை வழக்கு என்பதாலும் சி.பி.ஐ போன்ற மத்திய புலன் விசாரணை முகமைகள் விசாரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலும் அவர்களை விடுதலை செய்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்பட்டது. இப்படி இருக்கையில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூடி எழுவரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கவேண்டுமென ஆளுநருக்கு பரிந்துரைத்தது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநரை முடிவெடுக்கும் படி அறிவுறுத்த முடியாது என நீதிமன்றம் கூறியும் தமிழக அரசு தொடர்ந்து எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த திமுக அவர்களை விடுவிக்க என்ன செய்தது? அப்போதைய முதல்வர் கருணாநிதி எழுவர் விடுதலைக்காக உதவி செய்யாமல் துரோகம் செய்துள்ளார். ஆனால் இப்போது உண்மையில் அக்கறை இருப்பதுபோல தற்போதைய திமுக தலைவர் நாடகமாடுவது மட்டுமின்றி உண்மையில் அக்கறை இருக்கும் அதிமுகவையும் அரசியலுக்காக குற்றம் சாட்டிவருகிறார். இப்போது வரலாறு திமுகவை திரும்பி அடிக்கிறது என அதிமுக சார்பில் கடுமையான காட்டம் தெரிவித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.