பாடகர் எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: தமிழக அரசு உதவுமா?

  • IndiaGlitz, [Tuesday,September 08 2020]

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டாலும் நுரையீரல் பிரச்சனை காரணமாக எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கு நுரையீரலில் பிரச்சினை இருப்பதாகவும் அதற்காக அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழக அரசு சுகாதாரத் துறையில் எஸ்பிபியின் நுரையீரல் உறுப்பு மாற்றுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் எஸ்பிபியின் சிகிச்சைக்கு தமிழக அரசு எந்த வகையிலும் உதவி செய்ய தயார் என்று கூறியிருந்தார். எனவே எஸ்பிபியின் நுரையீரல் மாற்று சிகிச்சைக்கு தமிழக அரசு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

பிரபல தமிழ் நடிகரின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் இரங்கல்!

தமிழ், தெலுங்கு நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரான ஜெயப்பிரகாஷ் ரெட்டி இன்று காலமானார். அவருக்கு வயது 74

6 மாதத்திற்கு பின் குழந்தையின் பெயரை அறிவித்த நடிகர் ரியோராஜ்!

'கனா காணும் காலங்கள்' உள்பட ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகர் ரியோராஜ், அதன்பின் சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா'

இது என்ன வட இந்தியாவுக்கு மட்டுமான கூட்டமா? ஆர்கே செல்வமணி ஆவேச அறிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் திரையரங்குகள் திறப்பது எப்போது? என்பது குறித்த ஆலோசனை இன்று நடைபெறவுள்ளது.

B.A, B.Sc, B.Com, B.Tech டிகிரி முடித்தவர்கள் நாய் பராமரிக்க விண்ணப்பிக்கலாம்… பதற வைக்கும் விளம்பரம்!!!

B.A, B.Sc, B.Com, B.Tech போன்ற டிகிரிக்கு இணையான படிப்பை படித்தவர்கள் நாய் பராமரிக்கும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என டெல்லி ஐ.ஐ.டி கல்வி நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் எப்போது? நாளை தெரிய வாய்ப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கடந்த 5 மாதங்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது.