close
Choose your channels

வாத்தி கம்மிங்....! கோவை கொரோனா வார்டில் குத்தாட்டம் போட்ட நோயாளிகள்...!

Thursday, June 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோவையில் கொரோனா வார்டில், நோயாளிகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில், உள்ள குமரகுரு கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில் கொரோனா நோயாளிகளின் பயத்தை போக்கவும், மன அழுத்தத்தை விடுவிக்கவும் அவ்வப்போது பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அப்போது அங்கு கொரோனா சிகிச்சை பெறுபவர்களும், சிகிச்சை அளிக்கும் மருத்துவக்குழுவினரும் இணைந்து நடனம் ஆடி வருகிறார்கள். உறவுகளை பிரிந்து சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு இம்முறை ஆறுதலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு, கொரோனா நோயாளிகள் டான்ஸ் ஆடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.