close
Choose your channels

பிரபல நடிகர் தயாரிக்கும் படத்தில் துல்கர் சல்மான்.. பான் இந்திய நடிகர்களும் இணைவதாக தகவல்..!

Thursday, June 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான் என்பதும் இவர் தற்போது ‘கிங் ஆஃப் கோதா’ என்ற மலையாள படத்திலும், ‘வாத்தி’ இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த திரைப்படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரானா டகுபதி தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமுத்திரகனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அதுமட்டுமின்றி ஒரு சில பான் இந்திய நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு துல்கர் சல்மான் பிறந்த நாளில் அதாவது ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என்று படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குவது ஒரு மிகப்பெரிய பிரபலம் என்றும் ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் அறிவிப்பின் போது அவரது பெயரும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.