பெற்றோர்கள் தைரியமாக புகாரிக்கலாம்....! தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்...!

தனியார் பள்ளிகள் வாங்கும் வசூல் கட்டணம் குறித்து, பெற்றோர்கள் தாராளமாக முன்வந்து புகாரளிக்கலாம் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

அன்பில் மகேஷ் அவர்கள் திருச்சி மாவட்டத்தில், எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் இருக்கும் பல மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறோம். தனியார் பள்ளிகளைவிடுத்து, மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தனியார் பள்ளிகள் 100% கட்டணம் வசூலிப்பது பற்றி யாரும் நேரடியாக புகாரளிப்பதில்லை, பெற்றோர்கள் முன்வந்து தைரியமாக புகார் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்விற்கு பயிற்சி அளிப்பது பற்றி, நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்களின் குழு பரிந்துரை செய்து வருகிறது. இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்என்று கூறினார்.

 

More News

பிறந்த நாளில் மாறி மாறி கிடைத்த முத்தம்: திக்குமுக்காடி போன நடிகை கார்த்திகா!

கடந்த 80கள் மற்றும் 90களின் பிரபலமான நடிகையாக இருந்த நடிகை ராதாவின் மகள் கார்த்திகா என்பதும் இவர் கேவி ஆனந்த் இயக்கிய 'கோ' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

ரஜினிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? அமெரிக்க பயணம் குறித்து கஸ்தூரி கேள்வி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய தனி விமானத்தில் சென்ற நிலையில்,

குழந்தைகளுக்கு கோவிட், CT ஸ்கேன் எடுக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கொரோனா பரவலின் மூன்றாவது அலை அதிகளவில் குழந்தைகளைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்

'பாபநாசம் 2' படத்தில் கமல் ஜோடியாக இந்த நடிகையா? அப்ப மீனா இல்லையா?

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமான 'பாபநாசம்' திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே.

எதையும் ஒளித்து வைக்க முடியாது… நடிகை அமலா பாலின் செம குத்து டான்ஸ் வைரல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது வெப் சீரிஸிலும் களம் இறங்கி இருக்கிறார்.