close
Choose your channels

பிறந்த நாளில் மாறி மாறி கிடைத்த முத்தம்: திக்குமுக்காடி போன நடிகை கார்த்திகா!

Monday, June 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 80கள் மற்றும் 90களின் பிரபலமான நடிகையாக இருந்த நடிகை ராதாவின் மகள் கார்த்திகா என்பதும் இவர் கேவி ஆனந்த் இயக்கிய ’கோ’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை கார்த்திகா சமீபத்தில் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்களை நடிகை ராதா தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகள் பிறந்த நாள் குறித்து நடிகை ராதா கூறியபோது, ‘என்னுடைய கார்த்திகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்து, பிறந்தநாள் நிகழ்ச்சியின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கார்த்திகாவின் குடும்பத்தினர் மற்றும் அம்பிகாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகா பிறந்தநாளை அடுத்து அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறிய நிலையில் தன்னை வாழ்த்திய அனைத்து ரசிகர்களும் அவர் தனது நன்றியை கார்த்திகா தெரிவித்துள்ளார். மேலும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் கார்த்திகாவின் கன்னத்தில் அம்மா ராதா மற்றும் பெரியம்மா அம்பிகா ஆகிய இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்து அவரை திக்குமுக்காட செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.