முதல்ல கவுன்சிலர் தேர்தல்ல நின்னு பழகுங்க விஷால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  • IndiaGlitz, [Thursday,December 07 2017]

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். தேர்தல் என்பது விளையாட்டு அல்ல என்றும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடுவது போன்று பேப்பர் கொடுக்கும் விஷயம் அல்ல அரசியல் தேர்தல் என்றும் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'முதலில் விஷால் கவுன்சிலர் தேர்தலில் நின்று தேர்தலில் போட்டியிடுவது எப்படி என்று பழக வேண்டும் பின்னர் சட்டமன்ற தேர்தலில் நிற்க வேண்டும். தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது உள்ளூரில் உள்ள பத்து பேர் கையெழுத்து போட வேண்டும். கையெழுத்து போட்டவர்கள், நாங்கள் தான் கையெழுத்து போட்டோம் என்று நேரில் கூற வேண்டும். திடீரென கையெழுத்து போட்டவர் ஆளை காணோம் என்று கூறுவதற்கு தேர்தல் என்ன விளையாட்டா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

மேலும் நிருபர் ஒருவர், 'விஷாலை பார்த்து அதிமுக பயப்படுகிறதா? என்று கேட்ட கேள்விக்கு 'அதிமுகவினர் பயப்படுவதற்கு விஷால் என்ன சூரப்புலியா? அதிமுகவினர்களுக்கு பாம்புகளையே கையில் பிடிக்கும் தைரியம் உண்டு' என்று பதிலளித்தார்.

More News

விஷாலுக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த புதிய உத்தரவு

ஆர்.கே.நகரின் வேட்பாளர் இறுதி பட்டியல் சற்றுமுன் வெளியாகிவிட்டதால் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் 58 இறுதி வேட்பாளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியானது. அதில் விஷால் பெயர் இல்லை என்பதால் அவர் போட்டியிடும் வாய்ப்பு இனி இல்லை என்றே கூறப்படுகிறது.

நடிகராக மாறிய இயக்குனர் சுசீந்திரன்

கோலிவுட் திரையுலகில் பல இயக்குனர்கள் நடிகர் அவதாரம் எடுத்துள்ள நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரனும் தற்போது நடிகராக மாறிவிட்டார்.

அந்த 2 பேரை காணவில்லை, உயிருக்கு ஆபத்தா? விஷால் அச்சம்

ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஒரு வாய்ப்பாக இன்று மதியம் 3 மணிக்குள் முன்மொழிந்த அந்த இரண்டு பேர்களும்

ஆண்டவா! அராஜகத்தில் இருந்து என் அன்பான நாட்டை காப்பாற்று: விஷால்

இதுவரை தேர்தல் கமிஷன் வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு பின் மீண்டும் நிராகரிக்கப்பட்டது விஷாலின் விஷயத்தில் தான்