முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

  • IndiaGlitz, [Friday,August 17 2018]

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானதை அடுத்து அவரது உடல் அவரது வீட்டிற்கு நேற்று எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணண குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் வாஜ்பாய் உடல் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் கூறியிருந்த நிலையில் சற்றுமுன்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டு ஸ்மிரிதி ஸ்தல் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டிருக்கும் அலங்கார வாகனத்தின் பின்னே சென்று கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒருசில மணி நேரத்தில் வாஜ்பாய் உடல் நல்லடக்கம் செய்யப்படும்

More News

ஆகஸ்ட் 19ஆம் தேதி  சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து

இம்மாதம் 19ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கேரளாவில் பள்ளத்தில் சரிந்து விழும் பங்களா: அதிர்ச்சி வீடியோ

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநிலமே ஸ்தபித்து போயுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தை விட அம்மாநில மக்களை அச்சுறுத்துவது நிலச்சரிவுதான்.

இயக்குனருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய யுவன்

கடந்த வாரம் வெளியான யுவன்ஷங்கர் ராஜாவின் 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு இளைஞர்களின் கூட்டம் அலைமோதுவதால்

மலையாள மீடியாக்களின் மனிதாபிமானம்

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது

நயன்தாராவின் முதல் சாதனை

பொதுவாக ரஜினிகாந்த், அஜித் ,விஜய், சிவகார்த்திகேயன் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அதிகாலை காட்சிகள் திரையரங்குகள் திரையிடப்படுவது வழக்கம்.