close
Choose your channels

ஒரே படத்தில் இத்தனை பிக்பாஸ் போட்டியாளர்களா? டைட்டிலே ஃபையரா இருக்குதே?

Friday, February 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் ஒரே படத்தில் பல பிக்பாஸ் போட்டியாளர்கள் இணைந்து நடிக்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேஎஸ் சதீஷ்குமார் என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகும் படத்திற்கு ’ஃபயர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களான பாலாஜி முருகதாஸ், ரக்சிதா மகாலட்சுமி, சுரேஷ் தாத்தா, சாக்ஷி அகர்வால் போன்ற பிக் பாஸ் போட்டியாளர்களும், காயத்ரி, சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர் உள்ளிட்டவர்களும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

டிகே இசையில், சதீஷ் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே படத்தில் நான்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.