விவசாய பண்ணை குட்டையில் விழுந்து 4 வயது சிறுவன் பலி: திருந்தாத பெற்றோர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த 2 வயது சுஜித், பெற்றோரின் அலட்சியத்தால் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில், இனியாவது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
சுஜீத்தின் மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் மட்டும் நான்கு குழந்தைகள் இதேபோன்று பெற்றோர்களின் அலட்சியத்தால் பலியாகியுள்ளது. தண்ணீர் தொட்டி, குளியல் தொட்டி, மழை நீர் சேகரிப்பு தொட்டி ஆகிவற்றில் விழுந்து மூன்று குழந்தைகள் கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் பலியாகியுள்ளனர்.
சுஜித் மற்றும் மூன்று குழந்தைகள் மரணத்திற்குப் பின்னும் பெற்றோர்கள் இன்னும் அலட்சியமாக உள்ளதால் சிறு குழந்தைகள் பலியாகும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு குழந்தை இதே போன்ற ஒரு விபத்தில் இறந்து உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
சத்தியமங்கலம் அருகே திகினார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் என்ற விவசாயிக்கு 4 வயதில் ஹர்ஷித் என்ற மகன் இருந்தார். செல்வகுமார் தன்னுடைய தோட்டத்தில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக பண்ணை குட்டை ஒன்றை கட்டியிருந்தார். அந்த குட்டையில் தண்ணீர் நிரம்பி இருந்த நிலையில், சிறுவன் ஹர்ஷித் குட்டையின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த நிலையில் திடீரென குட்டையின் உள்ளே தவறி விழுந்து மூச்சு திணறி இறந்ததாக கூறப்படுகிறது.
சிறுவனை காணாமல் பலமணி நேரமாக பெற்றோர் தேடிய நிலையில் இறுதியில் ஹர்ஷித் குட்டையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இனிமேலாவது ஐந்து வயது வரை பெற்றோர்கள் குழந்தைகளை தங்களுடைய கண்காணிப்பில் வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments