சிறைக்கு வெளியே வந்தார் குண்டர் சட்டத்தின் குரல்வளையை நெறித்த வளர்மதி

  • IndiaGlitz, [Tuesday,September 05 2017]

கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த சேலம் மாணவி வளர்மதியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட் அவர் மீதான குண்டர் சட்டத்தை நீக்கி உத்தரவிட்டது. இதற்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் வளர்மதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் கோர்ட் உத்தரவின்படி சற்றுமுன்னர் வளர்மதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்த நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், 'குண்டர் சட்டத்தின் குரல்வளை நெறித்து..தங்கை வளர்மதி தரணி போற்ற வருகிறாள்' என்று கூறியுள்ளார்.

இன்றைய இளையதலைமுறைகள் சமூக அநீதி நடைபெறும்போது 'எனக்கென்ன' என்று ஒதுங்கியிராமல் போராடும் குணம் படைத்தவர்களாக இருப்பதால் இனி அதிக நாட்கள் அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்ற முடியாது என்பது இந்த விடுதலையின் மூலம் தெரியவந்துள்ளது.

More News

பாரதிராஜா தலைமையில் நடந்த 'களவாணி' நடிகரின் திருமணம்

விமல், ஓவியா நடித்த 'களவாணி' படத்தில் யதார்த்தமான வில்லனாக அறிமுகமான திருமுருகன்,

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவிய மாணவர்கள் போராட்டம்

அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையே கொந்தளிக்க செய்துவிட்டதால் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் வலுவடைந்து வருகிறது.

வளர் பெளர்ணமி போல் வளர வளர்மதிக்கு வாழ்த்து. கமல்

கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்ச்சி

வீரமரணம் அடைந்த போலீஸ் அதிகாரியின் மகளுக்கு உதவும் கிரிக்கெட் வீரர்

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் போலிசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீத் என்பவர் வீரமரணம் அடைந்தார்.

அரசியல்வாதிகள் - நடிகர்கள் வரவேண்டாம்: மாணவர்கள் எதிர்ப்பு

கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தனர்...