க்ரைம் களத்தில் இறங்கும் பிக்பாஸ் புகழ் நடிகர்!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

ஹிந்தியில் மிகப்பெரும் புகழ்பெற்ற கிரைம் டிவி நிகழ்ச்சி ஒன்றின் தமிழாக்கம் விரைவில் தமிழ் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சேனலில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியில் அனுப் சொனி என்பவர் மிக அருமையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் அதே விறுவிறுப்புடன் கணேஷ் வெங்கட்ராமனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதுகுறித்து கணேஷ் வெங்கட்ராமன் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய போது 'தன்னுடைய தாத்தா ஒரு காவல்துறை அதிகாரி என்றும் தன்னுடைய தந்தை ஒரு வழக்கறிஞர் என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு மற்றும் கிரைம் குறித்த தகவல்கள் தமது ரத்தத்திலேயே ஊறி இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியை தான் சிறப்பாக தொகுத்து வழங்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்

தமிழ் ஆடியன்ஸ்கள் கணேஷ் வெங்கட்ராமன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாக கூறப்படுகிறது. சோனி டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 

More News

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த புதிய விருந்தாளி!

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வருவதால் தற்போது இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று நாமினேஷன் படலம் முடிந்து கவின்

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த ஈரான் நடிகை

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'ஜன கன மன' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில்

சுரேஷ் சந்திரா தாயார் மறைவு: அஞ்சலி செலுத்திய அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி மக்கள் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரும், தல அஜித்தின் மேனேஜராக பல ஆண்டுகளாக இருந்து வருபவருமான சுரேஷ் சந்திரா

சர்கார் படத்தின் செய்தி வாசிபாளினிக்கு திருமணம்!

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் செய்தி வாசிப்பாளராக ஒரு சிறு கேரக்டரில் நடித்தவர் அனிதா சம்பத்.

முடிவுக்கு வந்தது கார்த்திக் நரேனின் அடுத்த படம்

கோலிவுட் திரையுலகில் இளம் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் இயக்கிய 'துருவங்கள் பதினாறு' திரைப்படம் கோலிவுட் திரையுலகினர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.