close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த ஈரான் நடிகை

Tuesday, August 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'ஜன கன மன' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடித்து வரும் நிலையில் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்து வருகிறார். மேலும் கேஜிஎப் வில்லன் ராமச்சந்திர ராஜூ இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 'ஜன கன மன' படத்தில் ஈரானிய நடிகை எல்னாஸ் நோரோஸி என்பவர் இணைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இவர் ஏற்கனவே இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்களிலும், இந்தி சீரியல்களிலும் நடித்தவர் என்பதும், தற்போது கோலிவுட்டில் இவர் 'ஜன கன மன' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் எல்னாஸ் நோரோஸி கலந்து கொண்டதாகவும் அவருக்கு இந்த படத்தில் ஒரு சில ஆக்சன் காட்சிகள் இருப்பதால் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

'என்றென்றும் காதல்' அகமது இயக்கி வரும் இந்த படம் ஜெயம் ரவியின் 26வது படமாக உருவாகி வருகிறது. ஜெயம் ரவி ஏற்கனவே 'போகன்' இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் ஒரு படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.