close
Choose your channels

'உன்னை உயிரோடு கொண்டு போய் சேர்க்குறது என் பொறுப்பு: 'ஜோஷ்வா இமைபோல் காக்க' டிரைலர்..!

Friday, February 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கௌதம் மேனன் இயக்கத்தில், பிக்பாஸ் வருண் நடிப்பில் உருவான ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ என்ற திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த ட்ரெய்லர் ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் நிலையில் முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு காதலிக்காக ஒரு காதலன் எடுக்கும் அதிகபட்ச ரிஸ்க் என்னவாக இருக்கும் என்பதை இந்த ட்ரைலரில் இருந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அடிதடி, ஆக்சன், துப்பாக்கி சூடுகளுக்கு இடையே நடக்கும் ரொமான்ஸ் தான் இந்த படத்தின் கதை என்பது இந்த ஒரு நிமிட ட்ரெய்லர் இருந்து தெரிய வருகிறது. வருண், கிருஷ்ணா, ராஹேல், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு கார்த்திக் இசை அமைத்துள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் கௌதம் மேனனின் மற்றொரு வெற்றி பெற பட்டியலில் இணையும் என்பது இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது உறுதியாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment