திருமாவளவன் விவகாரம்: காயத்ரி ரகுராமின் அடுத்த அதிரடி
இந்துக்கோயில் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்தார். இதனையடுத்து அவரது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
காயத்ரி ரகுராமன் பதிவு செய்த இந்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் காயத்ரி வீட்டின் முன் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் பாதுகாப்பு கேட்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து பேசியதில், பலர் தனது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் காவல்துறையினர் தனது வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.