அஜித், விஜய் உள்பட அனைத்து ரசிகர்களுக்கும் காயத்ரி ரகுராமின் வேண்டுகோள்!

  • IndiaGlitz, [Friday,March 27 2020]

கொரோனா வைரஸ் பரவுவது குறித்த விழிப்புணர்வை கோலிவுட் திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் சற்றுமுன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் நடிகை நடிகர்கள் பலர் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாம் எல்லோரையும் பாதுகாப்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனால் சில இளைஞர்கள் எந்தவித பயமும் இல்லாமல் குருட்டு தைரியத்தில் நமக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்து வெளியில் செல்கிறார்கள். அவர்களுக்கு வைரஸின் சீரியஸ் குறித்து தெரியவில்லை. அவர்களுக்கு வைரஸ் ஒருவேளை தாக்கினால் அவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரவும் அபாயம் உள்ளது

மேலும் வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு நிறைய பேர் வந்து உள்ளார்கள். அவர்களை தற்போது அரசு தனிமைப்படுத்தி வைத்துள்ளது. அவர்களுடைய வீட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. எனவே அவர்களை தனிமையில் இருக்க விடுங்கள். அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்

மேலும் மார்க்கெட் சென்றாலும் காய்கறி வாங்க சென்றாலும் ஒரு மீட்டர் தள்ளி நின்று ஒருவரை ஒருவர் தொடாமல் பார்த்துக் கொள்ளவும். இது ஒரு பாதுகாப்பான நடவடிக்கையாகும். முதலில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் அடுத்தவரையும் பாதுகாக்க முடியும்.

அதுபோல் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் உள்பட அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரவர்களுக்கு பிடித்த நடிகர்கள் கூறிய வழிமுறைகளை ஒரு ரசிகராக கடைபிடியுங்கள். மருத்துவர்கள் மற்றும் அரசுகளும் நமக்காக நல்லது செய்து வருகின்றார்கள். நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் அது தப்பான முடிந்துவிடும். இந்த வாரமும் அடுத்த வாரமும் நாம் கடந்து விட்டோம் என்றால் அதன் பின்னர் பெரிய பாதிப்பு இருக்காது. எனவே அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்

More News

ஞாயிறு முதல் புதிய உத்தரவு: கடைகள் திறந்திருக்க கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காய்கறிகள், மளிகை கடைகள், பால் மற்றும் மருந்து கடைகள்,

சற்றுமுன் வந்த தகவல்: தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் ஏற்கனவே 6 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு

கதைகேளுங்கள்!!! இணையம் வழியே கதைச்சொல்லும் கதைச்சொல்லிகள்!!! 

ஒரு தலைமுறைக்குமுன் வாழ்ந்த எல்லா தாத்தா, பாட்டிகளும் ஒரு சமூகத்தின் கதைச்சொல்லிகளாக இருந்தனர்.

கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை!!! நட்பு நாடுகளின் அரசியல் அழுத்தம்!!! 50 ஆண்டுகால வரலாறு!!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கியூபா தற்போது உலகம் முழுக்க கவனம்பெற்று வருகிறது.

ஊரடங்கு மட்டும் போதாது.. ஒரு வருடம் சமூக விலகல் வேண்டும்..! ஸ்டான்ஃபோர்ட் பேராசிரியர்கள்.

உரிய மருந்து கண்டுபிடிப்பதும் இதை கட்டுப்படுத்த ஒரு வழி. ஆனால் மருந்து கண்டறியப்படும் வரை கட்டாயம் சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும்.