close
Choose your channels

கோவைக்கு பதில் சென்னை வந்த கிராமத்து மாணவி, உதவிய நல் உள்ளங்கள்: சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி

Wednesday, September 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கல்லூரியில் சேருவதற்காக கோவைக்கு செல்வதற்கு பதிலாக தவறுதலாக சென்னைக்கு வந்த கிராமத்து மாணவிக்கு சென்னையில் உள்ள நல் உள்ளங்கள் செய்த உதவி சினிமா திரைக்கதையும் மிஞ்சும் அளவிற்கு நெகிழ்ச்சியாக உள்ளது

கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருச்சியை சேர்ந்த முசிறி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சுவாதி. 12ஆம் வகுப்பு தேர்வில் 1017 மதிப்பெண்கள் எடுத்து கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிக்க விண்ணப்பித்திருந்தார். இவருக்கு வேளாண் பல்கலையில் இருந்து கவுன்சிலிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் இந்த கவுன்சிலிங் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாணவி தவறுதலாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் கவுன்சிலிங் என நினைத்து தனது தாயாருடன் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ளார்.

அண்ணா பல்கலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டுருந்தவர்களிடம் அண்ணா அரங்கம் எங்கே இருக்கிறது என்று அந்த மாணவி கேட்க, அவர்கள் அந்த கவுன்சிலிங் பேப்பரை வாங்கி பார்த்தபோது கோவைக்கு செல்வதற்கு பதிலாக அவர்கள் சென்னைக்கு தவறுதலாக வந்துள்ளதை அறிந்தனர். இதுகுறித்து அந்த மாணவியிடம் தெரிவித்தபோது மாணவி சுவாதி மனமுடைந்து கிட்டத்தட்ட அழத்தொடங்கினார்

காலை 8 மணிக்கே கோவை பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் ஆரம்பித்த நிலையில் உடனடியாக அங்கு வாக்கிங் சென்று கொண்டிருந்த நபர்கள் அந்த மாணவிக்கு உதவ முன்வந்தனர். ஒருவர் உடனடியாக சென்னையில் இருந்து கோவை செல்ல இருவருக்கும் ஆன்லைனில் விமான டிக்கெட்டை புக் செய்தார். இன்னொருவர் இருவருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்தார். மற்றொரு நபர் தன்னுடைய காரில் இருவரையும் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல தயாரானார். இன்னொருவர் கோவையில் உள்ள பல்கலைக் கழகத்திற்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி அந்த மாணவியும் அவருடைய தாயாரும் கோவைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் எனவே அவருக்காக காத்திருக்கவும் என்று வேண்டி கேட்டு கொண்டனர். பல்கலை நிர்வாகமும் இதற்கு ஒப்புகொண்டது. மேலும் இன்னொருவர் தனது கோவை நண்பருக்கு போன் செய்து விமான நிலையத்தில் இருந்து கோவை வேளாண் பலகலை செல்ல கார் ஏற்பாடு செய்ய சொன்னார்.

அந்த வகையில் வாக்கிங் சென்று கொண்டிந்த நல் உள்ளங்களின் உதவியால் சென்னையில் இருந்து இரண்டு மணி நேரத்தில் சுவாதியும் அவரது தாயாரும் வேளான் பல்கலைக்கு சென்று கவுன்சிலிங்கையும் வெற்றிகரமாக முடித்தனர். தற்போது அந்த மாணவிக்கு பிடெக் படிப்புக்கு இடம் கிடைத்துவிட்டது என்று தகவலும் உறுதி செய்யப்பட்டது. சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த மாணவி சுவாதி ’மீண்டும் தான் தனது தாயாருடன் சென்னை செல்ல இருப்பதாகவும் தனக்கு உதவி நல் உள்ளங்களுக்கு நன்றி சொல்ல இருப்பதாகவும் அது மட்டுமின்றி அவர்கள் தங்களுக்காக செலவு செய்த விமான டிக்கெட் உள்பட மொத்த பணத்தையும் திருப்பி கொடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த செய்தி சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.