close
Choose your channels

'கோட்' ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு சிஎஸ்கே தாரக மந்திரம்.. தளபதி விஜய்யின் முக்கிய அறிவிப்பு..!

Sunday, April 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு விருந்தாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் தளபதி விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த பாடலின் டைட்டிலாக விசில் போடு என்று அறிவித்துள்ளார்.

விசில் போடு என்பது சிஎஸ்கே அணியின் தாரக மந்திரமாக இருக்கும் நிலையில் அதையே இந்த பாடலின் டைட்டில் ஆகவும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று விஜய் அறிவித்துள்ள நிலையில் இந்த பாடலை விஜய் பாடியுள்ளதாகவும் மதன் கார்க்கி எழுதியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் தமிழ் புத்தாண்டு விருந்தாக இன்று வெளியாக இருக்கும் இந்த பாடலை எதிர்பார்த்து அனைத்து விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.